திருக்குறளும் அப்பரடிகள் தேவாரமும் - நான்மறை நெல்லைச்சொக்கர்
திருக்குறளும் அப்பரடிகள் தேவாரமும் - நான்மறை நெல்லைச்சொக்கர் http://nellaichokkar.blogspot.in/2009/07/blog-post_18.html தமிழகம் சமண்சமய இருள்மூடித் தடுமாறியபோது அவ்விருள் நீக்கும் ஞானசூரியனாய் அவதரித்தவர். இதனைச் சேக்கிழாரடிகள், அலகில்கலைத் துறைதழைப்ப அருந்தவத்தோர் நெறிவாழ உலகில்வரும் இருள்நீக்கி ஒளிவிளங்கு கதிர்போல மலரும்மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார் எனப் போற்றுகின்றார். சமயாசாரியர் மற்றவரின் வாழ்வினை நோக்கும்போது அப்பரடிகளின் வாழ்க்கை கடும் சோதனைகளே நிறைந்த வாழ்க்கையாக இருந்ததை நாம் காண்கின்றோம். இளமையில் ஒருவருக்கு நேரக் கூடாத துன்பங்கள் யாவும் அப்பரடிகளுக்கு நேர்ந்தன. அத்துன்பங்களே அவர் மனத்தை ‘சுடச் சுடச் ஒளிரும் பொன் போன்று’ தூய்மையும் துணிவும் நிறைந்ததாக்கின. ‘மறுஒழித்த இளம்பிறைபோல்’ வளர்கின்ற மருள்நீக்கியார் கல்வி பயிலத் தொடங்குகின்றார். எப்படி? ‘புலன்கொளுவ மனம்முகிழ்த்த சுருள்நீக்கி மலர்விக்கும் கலைபயிலத்’ தொடங்கினார் என்கின்றார் தெய்வச் சேக்கிழார். அ...
Comments
Post a Comment